Monday, December 21, 2015

பனமரத்துப்பட்டி ஏரி

பனமரத்துப்பட்டி ஏரி

1911ம் ஆண்டு பனமரத்துப்பட்டி ஏரியை, ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். பனைமரத்துப்பட்டி ஏரி 2700 (2,137) ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியில் சுமார் 800 கிணறுகள் தோண்டப்பட்டிருந்தன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது போக இப்போது 142 கிணறுகள் உள்ளன. மேலும் 1,900 தென்னை மரங்களும் ஏராளமான இதரவகை பலன் தரும் மரங்களும் உள்ளன.

போதமலை, கிட மலை ஜல்லூத்து மலை, பெருமாள் மலை உள்ளிட்ட பகுதியில்மலை பெய்யும் மழை நீர், பனமரத்துப்பட்டி ஏரிக்கு வருகிறது.

போதமலை, கிடமலை, ஜல்லூத்து மலை, பெருமாள் மலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் காட்டாற்று மழைநீர், கூட்டாறு என்ற இடத்தில், ஒன்று சேர்ந்து, குரால்நத்தம், திப்பம்பட்டி, பள்ளித்தெருப்பட்டி, அம்மாபாளையம் வழியாக சென்று, திருமணி முத்தாற்றில் கலக்கிறது.

திப்பம்பட்டியில், போதமலை, கிடமலை உள்ளிட்ட மலை பகுதியில் இருந்து மழைநீர் செல்லும் ஆற்றின் குறுக்கே, ஆங்கிலேயர்கள் அணை கட்டி, மழை நீரை, பனமரத்துப்பட்டி ஏரிக்கு திருப்பி விட்டனர்.

பனமரத்துப்பட்டி ஏரி நிரம்ம் நிலை வந்தால், ஏரிக்குள் செல்லும் தண்ணீரை தடுக்க, அணையின் ஷட்டர் திறக்கப்பட்டு,ஏரி நிரம்பும் சமயத்தில் உபரி நீர் மல்லூர் ஏரிக்குச் சென்று அங்கிருந்து பல்வேறு ஏரிகளை நிரப்பி வந்துள்ளது. தண்ணீரை, திருமணி முத்தாறுக்கு செல்லும் ஆற்றில் விடப்படும்.

மேலும் ஏரிக்கு நீர் வரும் பாதைகளின் குறுக்கே வனத்துறை சார்பிலும், குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும் ஏராளமான தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

பனைமரத்துப்பட்டி ஏரி சேலம் மாநகராட்சிக்கு சொந்தமானது.

சேலம் நகராட்சியாக இருந்த காலங்களில் பனைமரத்துப்பட்டி ஏரியே சேலம் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்துள்ளது. அங்கிருந்து கொண்டுவரப்படும் குடிநீரையே சேலம் மக்கள் பல ஆண்டுகள் பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றளவும் இராசிபுரம் நகருக்கு இருந்து குடி நீர் சென்றுக் கொண்டுள்ளது.
சேலம் பனைமரத்துப்பட்டி ஏரி சுற்றுலாத்தலமாகவும் படப்பிடிப்புகள் நடத்த ஏற்ற இடமாகவும் இருந்துள்ளது.
நாளடைவில் ஏரிக்குள் ஆக்கிரமிப்புகள் பெருகவே நீர் வழிப் பாதைகள் அடைக்கப்பட்டு ஏரிக்கு நீர் வரத்து தடைபட்டது. ஆக்கிரமிப்பு பகுதிகளில் வயல்கள் வடிவம் பெற்று, கிணறுகள் தோண்டப்பட்டன. தென்னை நெல் வாழை மரவள்ளி கிழங்க்கு நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு மரங்கள், பயிர்கள் நடப்பட்டன.
ரூ.25 கோடியில் ஏரியை சீரமைத்து, புதிய அணுகு சாலைகள் அமைத்து, ஏரியின் முகப்பில் நூற்றாண்டு வளைவு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மரத்தாலான பாலங்கள், படகு குழாம், மீன்பிடிப்புப் பகுதிகள், நீச்சல் குளம், தங்கும் விடுதிகள், கண்காணிப்பு கோபுரங்கள், கைவினைப் பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இங்கு ஏற்படுத்தவும் சுற்றுப் பகுதி கிராமங்களில் மரக் கன்றுகள் நட்டு, வனப் பகுதியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதி எதிர்காலத்தில் சேலம் மாநகர மக்களுக்கு மிகப் பெரிய சுற்றுலாத்தலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment